மோதி தலைமையிலான அரசு விவசாயிகளையும், விவசாயத்தையும், உயர்த்தும் வகையில் புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு பெரும் நன்மை பயக்கும். இதில் விவசாயிகள் விவசாய இயந்திர வங்கி (Agriculture Machinery Bank) அமைத்து சிறு குறு விவசாயிகளுக்கு வாடகையாக அளித்து பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் இயந்திர வங்கிக்காக இயந்திரங்கள் வாங்குபவர்களுக்கு அரசு ரூ 24 லட்சம் வரை மானியம் வழங்கும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது இந்த விவசாய இயந்திரங்களை பயன்படுத்தி விவசாய வேலைகளை எளிதாக்குவதுடன், குறைந்த செலவில் அதிக லாபம் பெற உதவும் என்பது தான். இதனால் விவசாயிகளின் நேரமும் குறையும், நல்ல லாபமும் ஈட்ட முடியும். இதற்காக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தகுந்த நிதிகள் அளித்து வருகிறது. நீங்களும் இத்திட்டத்தினால் பயன் பெற வேண்டும் என்றால் உங்கள் மாநில விவசாயத் துறையின் பொறியியல் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.
கஸ்டம் ஹைரிங் சென்டர் (Custom Hiring Center)
நீங்கள் சொந்தமாக கஸ்டம் ஹைரிங் சென்டர் தொடங்க நினைத்தால் அரசு 40 சதவீதம் உதவித் தொகை வழங்கும். இதன் கீழ் ரூ 60 லட்சம் வரையிலான திட்டத்தை (project) மேற்கொள்ள முடியும். இதில் உங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப இயந்திரங்களை வாங்கலாம். இதற்காக 40 சதவீதம் அதாவது ரூ 24 லட்சம் வரை அரசு வழங்கும்.
எப்படி துவங்குவது- விவசாய இயந்திர வங்கி
நீங்கள் சொந்தமாக கூட்டுறவு குழு அமைத்தும் கஸ்டம் இயந்திர வங்கி துவங்கலாம். ஆனால் நீங்கள் இந்த குழுவில் 7 இல் இருந்து 8 விவசாயிகளை மட்டுமே இணைக்க முடியும். இந்த குழுவில் அதிகபட்சமாக ரூ 10 லட்சம் வரையிலான திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும். இதில் நீங்கள் ரூ 8 லட்சம் வரை அரசிடம் இருந்து மானியம் வழங்கும். இதுவரை நாட்டில் 20 ஆயிரம் வரை இயந்திர வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள்.
நம் நாட்டில் 90 சதவீதம் ஏழை விவசாயிகள் உள்ளனர், மற்றும் இவர்களிடம் போதுமான நிலம் இல்லை. அவர்களின் பொருளாதார நிலையும் சரியாக இல்லாத காரணத்தால் அவர்களால் விலையுயர்ந்த இயந்திரங்களை வாங்க இயலாது. இதற்காகத்தான் அரசு இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாய பகுதிகளை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்க்கையை மாற்ற இயலும்.
மக்களுக்கான ஒதுக்கீடு
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளில் பெண்களுக்கு 30 சதவீதம்,சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 16 சதவீதம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 8 சதவீதமும் வழங்கப்படும்.
அதிகரிக்கும் இயந்திரங்களின் தேவை
ட்ராக்டர், ஜீரோ டில் விதை, உர துரப்பணம், ஹார்வெஸ்டர், லேசர் லேண்ட் லெவெலர், ரோட்டாவேட்டர், மல்டிகிராப் த்ரெஷர், உர துரப்பணம், சியல் ஃப்ளோ நெல் த்ரெஷர், நெல் நடவு போன்ற நவீன இயந்திரங்களின் தேவை விவசாய பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
விவசாய இயந்திர வங்கி திட்டத்தை செயல்படுத்தி சிறு குறி விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதுடன் கூலி செலவும், வேலை நேரம் அனைத்தும் கணிசமாக குறையும் மற்றும் நல்ல லாபமும் ஈட்ட முடியும்.
K.Sakthipriya
Krishi Jagran