விவசாயம் தொடர்பான திட்டங்களினால், விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளினால் நாடு பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும். பிரதமர் கிசான் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்களினால் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவதில் மிகழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
PM கிசான் (PM Kisan)
பிரதமர் வெளியிட்ட சில தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது: 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக 1.82 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் சம்மன் நிதியன் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் பலன் சிறு விவசாயிகளை சென்றடைந்துள்ளது.
விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது. 11,632 திட்டங்களுக்கு ரூ.8.585 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளோம். தேசிய வேளாண் சந்தை (இ - நாம்) என்பது இந்தியாவில் விவசாய பொருட்களுக்கான ஆன்லைன் வளர்த்தக தளமாகும்.
இ நாம் தளத்தில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்து, ரூ.1.87 லட்சம் கோடி வர்த்தகம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க