பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 July, 2021 8:12 AM IST
Credit : Dinamalar

கோவிட் தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வந்தாலும் அதன் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன. இதனால் மக்கள் வழக்கம்போல பொது இடங்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். இந்தியாவில் உருவாகிய டெல்டா ரக வைரஸ் (Delta Virus), துவக்கத்தில் கிழக்காசிய நாடுகளை மட்டுமே அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது உலகின் பல நாடுகளில் டெல்டா அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பரிசோதனை

இன்னும் எவ்வாறெல்லாம் உருமாறும் என்று உலகம் முழுக்க விஞ்ஞானிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான குழுமத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் வரும் குளிர்காலத்தில் கொரோனா (Corona) புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தற்போது உள்ள ரகத்தைக் காட்டிலும் அபாயகரமானதா அல்லது மிதமான பாதிப்பு உடையதா என இன்னும் சரியாகத் தெரியவில்லை எனக் கூறிய அவர், விரைவில் அதற்கான முடிவை தங்கள் குழு அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.

வரவிருக்கும் ஆண்டுகளில் உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய சவால் என்னவென்றால் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாடுகள், தடுப்பூசி பற்றாக்குறையால் (Vaccine Shortage) தவிக்கும் நாடுகள் என்னும் நிலைதான் எனக் கூறியுள்ளார்.

பிரான்சில் இன்னும் முழுமையாக ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாத நிலையில் இவற்றை நீக்கலாமா, வேண்டாமா என்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் அவை திட்டமிட்டுவருகிறது. மேலவையின் ஒப்புதலுக்காக இந்த அவை காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

40 கோடி பேருக்கு கொரோனா ஆபத்து: ICMR ஆய்வில் தகவல்!

ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!

English Summary: New variety of corona in winter: French scientist information
Published on: 24 July 2021, 08:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now