தமிழகத்தில் கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து மண்ணைக் குளிர்வித்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை, விவசாயிகளுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன மழை எச்சரிக்கை (Districts May get heavy rain)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் ஓரிரு சில இடங் களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், நாளை (21ம் தேதி) இடியுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை (Temperature)
அதிகப்பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும், ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning For Fisherman)
மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில், இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குமரிக்கடல் பகுதியில், மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பலத்தக் காற்று வீசலாம்.
நாளை முதல் வரும் 22ம் தேதி வரை, கேரளக் கடலோரப் பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 23ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி (Delhi flooded)
இதனிடையே தலைநகர் டெல்லியில் நேற்று சுமார் 3மணி நேரம் கனமழை பெய்தது. இந்த கனமழையால் டெல்லி நகரமே வெள்ளத்தால் ஸ்தம்பித்தது. ஆங்காங்கே மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி முதியவர் ஒருவர் உட்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு