தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து மண்ணைக் குளிர்வித்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை, விவசாயிகளுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கன மழை எச்சரிக்கை (Districts May get heavy rain)
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் வாய்ப்பு உள்ளது.
மற்ற மாவட்டங்களில் லேசான மழை பதிவாகக்கூடும். ஆக மொத்தம் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை பொழிவு (District Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தின் செந்துறை, திருச்சி மாவட்டத்தின் கோல்டன் பாறை ஆகியவற்றில் தலா 11 சென்டிமீட்ர் மழை பதிவாகியுள்ளது. இதைத்தவிர பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning For Fisherman)
-
வரும் 16ம் தேதி வரை, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்தக் காற்று, மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜூலை 16ம் தேதி கடலோர குஜராத் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு!
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!