தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக சில மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கைத் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10.10.2023 மற்றும் 11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12.10.2023 மற்றும் 13.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை) தலா 4, நாமக்கல் 3, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), எம்.ஜி.ஆர்.நகர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அடையார் (சென்னை), மாரண்டஹள்ளி (தர்மபுரி) தலா 1.
அதேப்போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
இதையும் காண்க:
2000 ரூபாய் நோட்டு- இன்றுடன் முடிவுக்கு வரும் காலக்கெடு.. கவனம்!
எம்.டி. (சித்தா) மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு