News

Tuesday, 21 July 2020 04:52 PM , by: Elavarse Sivakumar

Credit: Sky met Weather

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து மண்ணைக் குளிர்வித்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை, விவசாயிகளுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மழை எச்சரிக்கை (Rain Warning)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும்.

Credit: Al jaseera

சென்னை வானிலை (Chennai weather)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

வெப்பநிலை (Temperature)

அதிகப்பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும், ஒட்டியே இருக்கும்.

அதிகபட்ச மழைப்பதிவு

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தின் கல்லார் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning For Fisherman)

வரும் 23ம் தேதி வரை மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

22 ம் தேதி முதல் 24ம் தேதி வரை கேரளக் கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசலாம்.

23 மற்றும் 24ம் தேதிகளில் கர்நாடகக் கடேலாரப்பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வரும் 24ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்தக் காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!

ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)