நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 February, 2022 4:03 PM IST
Night Lockdown, Sunday Lockdown

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இரவு ஊரடங்கு (Night Lockdown)

  • மாநிலம் முழுவதும் நாளை (ஜனவரி 6) முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

  • இரவுநேர ஊரடங்கு நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

  • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி.

  • அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

  • பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதி.

  • உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

ஞாயிறு முழு ஊரடங்கு (Sunday Lockdown)

  • ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி.

  • முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது.

  • முழு ஊரடங்கில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி.

  • இரவு ஊரடங்கின் போது மற்றும் முழு ஊரடங்கின்போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக செல்லும் மக்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

நேரடி வகுப்புகளுக்கு தடை (No Direct Classes)

  • மழலையர் காப்பகங்கள் தவிர,மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

  • அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9 ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

  • பொதுத்தேர்வு செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12 ம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கும்

  • அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜன.,20 வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

  • பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை

  • பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி (50% Passengers olny allowed)

  • பொது பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

  • மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்

  • அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

  • அனைத்து பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை

  • அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி

வழிபாட்டிற்கு தடை

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை

  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்

  • மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையங்களில் இருந்து செல்லும் பஸ்களை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வெறு இடங்களில் இருந்து பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

  • கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையங்குகள், அனைத்து சேவை துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டுடோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்

  • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் ஜன.,9 க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேர பணிக்கு செல்லும் போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்க்கான சான்றிதழையும் வைத்து கொள்ள வேண்டும்.

100 பேருக்கு அனுமதி (Allowed 100 members)

  • உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதி

  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் 100 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி

  • இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி

  • துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்

  • கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்

  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

  • அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்

  • திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்

  • உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியும் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

  • அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

  • அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் படிக்க

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா? பொங்கலுக்கு பிறகு அறிவிப்பு!

English Summary: Night curfew in Tamil Nadu from tomorrow: Full time curfew on Sundays!
Published on: 05 January 2022, 05:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now