இயற்கை விவசாயம் குறித்த அடிப்படை தொழில்நுட்பங்களை அறிய ஆர்கானிக் நீல்கிரீஸ் என்ற புதிய செயலியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்துள்ளார்.
சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். அப்போது, "ஆர்கானிக் நீல்கிரீஸ்" (Organic Nilgiris Mobile app) என்ற புதிய செயலியை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தார்.
ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது! - டெல்லியில் குவிந்த விவசாயிகள்!
இயற்கை வேளாண் மாவட்டமாகும் நீலகிரி
பின்னர் செய்தியாளர்குக்கு பேட்டி அளித்த அவர், நீலகிரி மாவட்டம் இந்தியாவின் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக திகழ்கிறது. இதன் வளத்தை பாதுகாக்க கிராமபுறங்களில் 21 வகையான 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மண் வளத்தை மேம்படுத்தி இயற்கை மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்கானிக் நீல்கிரீஸ் செயலி
இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் நிலம் தயாரிப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை உள்ள அடிப்படை விவரங்களை இந்த புதிய செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டில் இருந்து நீலகிரியை காக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்
70,000 விவசாயிகள் இலக்கு
நீலகிரியில் 4 ஆயிரத்து 800 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 200 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள 70 ஆயிரம் விவசாயிகளும் இயற்கை வேளாண் விவசாயிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஆண்ட்ராய்டு செல்போன் வைத்து உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், அறிமுகம் செய்யப்பட்ட செயலி ஆங்கிலத்தில் உள்ளதாகவும், தமிழ் மொழியுடன் விரைவில் இந்த செயலி அப்டேட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!