NITI ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த், கிரிஷி ஜாக்ரனின் MFOI 2024- நிகழ்வின் நடுவர் மன்ற குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விவசாயத் துறையின் செழிப்பு மற்றும் அதில் வெற்றிகரமாக செயல்படும் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடும் கிரிஷி ஜாக்ரனின் முயற்சிகளை மனதார பாராட்டியுள்ளார்.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு கிரிஷி ஜாக்ரான் ஊடக நிறுவனம் சார்பில் கடந்தாண்டு MFOI விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 6,7,8- ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைப்பெற்று முடிந்த MFOI 2023 நிகழ்வில் இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த முன்னோடி விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நடுவர் மன்ற குழுவின் தலைவர்:
2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விவசாயிகளை தேர்வு செய்யும் நடுவர் மன்ற குழுவின் தலைவராக NITI ஆயோக் உறுப்பினரான ரமேஷ் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து பேராசிரியர் ரமேஷ் சந்த் கூறுகையில், “திருமதி மற்றும் திரு.டொமினிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் ICAR உடன் இணைந்து, இந்தியாவின் மில்லியனர் விவசாயி (MFOI) என்ற புதிய மற்றும் தனித்துவமான முயற்சியைத் தொடங்கியுள்ளனர்."
"இப்போது வரை விவசாயத் துறையினை துன்பத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டிருந்தோம். இருப்பினும், இணை நிறுவனர்கள் தங்கள் முன்முயற்சியின் மூலம் இந்திய விவசாயத்தின் செழுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இது ஒரு முன்னுதாரண மாற்றம்; அது நல்ல தாக்கத்தை உருவாக்கும். எனது பார்வையில், விவசாயத்தை லாபகரமான தொழிலாக பார்க்க விவசாயிகளுக்கு MFOI உத்வேகமாக இருக்கும். எதிர்காலத்தில், நமது தேசத்தின் இளைஞர்களும் விவசாயத் துறையில் பணியாற்ற ஆர்வமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
MFOI 2024 விருது நிகழ்வு:
MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, வருகிற டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3, 2024 வரை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
MFOI 2023 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் பயணம் செய்து விவசாயிகளின் புகழை பரப்பும் நோக்கத்தோடு MFOI VVIF kisan bharat yatra- வாகனத்தை, ஒன்றிய சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் தனது பயணத்தை தொடங்கியது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், தமிழகத்தில் சில பகுதிகளிலும் இந்த யாத்ரா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பயணத்தின் வாயிலாக 6000 கி.மீ தூரத்தை கடந்து, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்துள்ளது கிரிஷி ஜாக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.
40 லட்சம் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்- மஹிந்திரா டிராக்டர்ஸின் ஸ்மைல்ஸ்டோன் கொண்டாட்டம்
மே 7 மற்றும் 8: எந்தெந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?