இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 April, 2023 11:01 AM IST
NITI Aayog released a report on best millet diets

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் சிறந்த தினை உணவு முறைகள் குறித்த அறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டது. மேலும் நிகழ்வில் பங்கேற்ற ஆய்வாளர்கள் தினை பயன்பாட்டினை மேம்படுத்த பிரதமர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பாராட்டினர்.

NITI ஆயோக், “உணவில் தினைகளை ஊக்குவித்தல்: இந்திய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் சிறந்த நடைமுறைகள்என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

"தினை நமது பாரம்பரிய உணவு முறையில் மிகவும் பொதுவான பகுதியாகும். இருப்பினும், நமது உணவுப் பழக்கம் படிப்படியாக அரிசி மற்றும் கோதுமைக்கு மாறிவிட்டது. நீரிழிவு போன்ற தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால், தினையினை நம் உணவில் மீண்டும் இணைப்பது அவசியமாகிறதுஎன்று நிகழ்வில் பங்கேற்ற தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கூறினார்.

தினை மதிப்பு சங்கிலியின் பல்வேறு கூறுகள், குறிப்பாக உற்பத்தி, செயலாக்கம் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் மாநிலங்கள், நிர்வாகங்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்ட நல்ல மற்றும் புதுமையான நடைமுறைகளின் தொகுப்பை இந்த கட்டுரை உள்ளடக்கியது. அறிக்கை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

(அ) மாநில திட்டங்கள் மற்றும் திணையினை மேம்படுத்துவதற்கான முயற்சிகள்;

(ஆ) ஐசிடிஎஸ்ஸில் திணையினை சேர்த்தல் (ICDS- Integrated Child Development Services)

(இ) ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதுமையான நடைமுறைகளுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

நிகழ்ச்சியில் பேசிய NITI ஆயோக் துணைத் தலைவர் சுமன் கே.பெரி, நமது உணவு முறைகளில் தினைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும், முக்கிய நீரோட்டத்தில் சேர்ப்பதற்கும் இந்த அறிக்கை ஒரு ஆதாரமாக செயல்படும். அறிக்கை வெளியீடு மிகவும் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார். தினைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில் பிரதமர் தீவிரமாக செயல்படுகிறார் என்றார்.

சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை மற்றும் ஆரோக்கிய தாக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் உணவு முறைகள் நம் வாழ்வில் மெதுவாக மாறியுள்ளன. மேலும் மக்கள் இப்போது தினையின் மருத்துவ, ஊட்டச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை பாராட்டுகின்றனர். அடுத்த கட்டமாக, தினைகளை ஒரு சூப்பர்ஃபுட் என பிரபலப்படுத்த  பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

NITI ஆயோக் உறுப்பினரான பேராசிரியர் ரமேஷ் சந்த் கூறுகையில், "தேசிய அளவிலும், உலக அளவிலும் தினைகளுக்கு மரியாதைக்குரிய அந்தஸ்தை வழங்குவதில் நமது பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துள்ளார்என்றார்.

NITI ஆயோக் துணைத் தலைவர் சுமன் கே பெரி முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர் வி.கே.பால் (சுகாதாரம்), டாக்டர் ரமேஷ் சந்த்(விவசாயம்), மற்றும் CEO B.V.R.சுப்ரமணியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அதிதி ரௌத், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலர் சுபா தாக்குர், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் துணைச் செயலர் தீபா ஆனந்த், மூத்த ஆலோசகர் ராஜீப் சென் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

pic courtesy: NITI aayog twitter page

மேலும் காண்க:

உரத்துறையில் இந்தியாவிற்கான சுதந்திரம் தொடங்கியது- IFFCO உரம் குறித்து அமித்ஷா பெருமிதம்

English Summary: NITI Aayog released a report on best millet diets
Published on: 27 April 2023, 10:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now