சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Center) தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் நிவர் புயல் (Nivar Cyclone) நிலைகொண்டுள்ளது. நாளை மாலை அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் (Balachandran) தெரிவித்துள்ளார். நிவர் புயலின் நகர்வுத் தன்மை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
5 கி.மீ வேகத்தில் நிவர் புயல்:
நிவர் புயலானது சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து 370 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருகிறது. வடக்கு-வடமேற்கு நோக்கி தற்போது நகர்ந்து வரும் நிவர் புயல், அதன்பின் வடமேற்கு திசையில் நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும். தமிழகம், புதுவை, ஆந்திரப்பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால் வழக்கத்தை விட அலைகள் 14 அடி உயரம் எழும்பும். கஜா புயலை (Gajah Cyclone) விட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசிய பேரிடர் குழுவினர் தயார்
தமிழகத்தில் நிவர் புயல் (Nivar Cyclone) தீவிரமடைந்ததை அடுத்து, மீட்பு பணியில் ஈடுபட 12 தேசிய பேரிடர் குழுவினரும், புதுச்சேரி, 2 காரைக்காலில் 1, நெல்லூரில் 3, சித்தூரில் ஒரு குழுவினர் தயார்நிலையில் உள்ளனர். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்கள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை , கடலூர், மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (National Disaster Rescue Troops) தயார் நிலையில் உள்ளனர். கூடுதல் தேவைக்கு 6 குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நிவார் புயல் நாளை கரையைக் கடப்பதால் மக்கள் யாரும் வெளிவர வேண்டாம்! முதல்வர் அறிவிப்பு!