விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.
பொதுவாக வாரத்தில் 5 நாட்கள் பள்ளி இயங்கும். பணிநாட்கள் குறைவாக இருக்கும் போது, சனிக்கிழமைகளில் பள்ளி வேலைநாட்களாக அறிவிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், தற்போது பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச் சொல்லக் கூடாது என, ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
வகுப்புகள் கிடையாது
நடப்பு கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று ஏற்கனவேத் தெரிவித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவித்து இருந்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.
கடும் நடவடிக்கை
இந்நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும்,மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும், பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒரே சிரஞ்சியில் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அலட்சியத்தின் உச்சம்!