News

Wednesday, 09 June 2021 06:43 AM , by: Daisy Rose Mary

கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படும் நிலையில், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

3-வது அலை குழந்தைகளை பாதிக்குமா?

இது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா கூறுகையில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை என்றார்.

மேலும், இரண்டாம் அலையின் போது பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு இணை நோய்த்தன்மை அல்லது குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும், லேசான பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படாமலே குணமடைந்தனர் என்றும் தெரிவித்தார்.

கொரோனா அலை உருவாக காரணம்?

எதிர்கால அலைகளை தடுப்பதற்கு முறையான கொரோனா நடத்தைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்று கூறிய அவர், மேலும் அலைகள் உருவாவதை தவிர்க்க வேண்டுமென்றால், குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தடுப்பூசி பெறும் வரை கொரோனா நடத்தைமுறையை நாம் பின்பற்ற வேண்டும் என்றார்.

கொரோனா பெருந்தொற்றின் போது ஏன் அலைகள் ஏற்படுகின்றன என விளக்கிய டாக்டர் குலேரியா, வைரஸ் மாற்றமடையும் போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன, தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, கொரோனா நடத்தைமுறைகளை மக்கள் பின்பற்றாமல் போவதே புதிய அலை ஏற்படுவதற்கான காரணம் என்றார்.

சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரசான கொரோனா அலைகளாக தாக்கும். 1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சலின் போதும், 2009-ல் பன்றி காய்ச்சலின் போதும் இது தான் நடந்தது. பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக இது மாறலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க....

மாநிலங்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி & இலவச ரேஷன் பொருட்கள் தீபாவளி வரை வழங்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு!!

ஆபத்து அதிகமுள்ள புதிய வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)