புதுவையில், நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையைத் திரும்பப் பெறுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு (Case in the High Court)
புதுவையில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளளது. இந்த வழக்கு விசாரணையின்போது, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தப்போவது இல்லை என புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்தது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் (Instruction to authorities)
இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்.7ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கட்டது. குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும், அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதைத் தள்ளிவைக்க வேண்டும் என நீதிமன்றம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு (Order of the High Court)
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, புதுவை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை திரும்பப்பெற்று, புதிய அறிவிப்பை 5 நாட்களில் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போதைக்குத் தேர்தல் இல்லை என புதுவை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...