மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு வேலை கிடையாது என்ற புதிய சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
விரைவில் முதலிடம் (Topping soon)
100 கோடியைத் தாண்டி உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இந்நிலைத் தொடர்ந்தால், மிக விரைவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அரசுகள் நடவடிக்கை (Governments action)
இதன் அடிப்படையில் இந்தியாவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மசோதா (Bill)
இதன் ஒருபகுதியாக உத்தரப் பிரதேச மக்கள் தொகை(கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல் மற்றும் நலன்கள்) மசோதா 2021' வை அம்மாநில சட்ட ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்கலாம் எனவும், அதற்கு ஜூலை 19 ம் தேதி வரைக் காலக்கெடு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மசோதாவின் அம்சங்கள் (Features of the bill)
அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளதாவது:
போட்டியிடத் தடை (Prohibition of competition)
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
அரசு வேலை கிடையாது (There is no government job)
அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது.
12 மாத சம்பளம் (According to 3 percent)
2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு, அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும்.
3 சதவீத படி (According to 3 percent)
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme)ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும்.
கருத்தடை மாத்திரை (Birth control pill)
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மையங்கள் அமைக்க வேண்டும். இந்த மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனஙகள் இணைந்து கருத்தடை மாத்திரை, காண்டம்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.
பதிவு கட்டாயம்
குடும்பக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
பாடம்
மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
இரண்டுக் குழந்தைகளேப் போதும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே, அதிகரித்துவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க...
1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!