தீபாவளி அன்று, கறிக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. எனினும் எதிர்ப்புக்கிளம்பியதை அடுத்து, தடை விலிக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அசைவ ப்ரியர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டம் (Diwali celebration)
நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில், மகாவீரர் நினைவு நாளும் வருகிறது.
புலால் உண்ணாமையை வலியுறுத்திய மகாவீரரின் நினைவுநாள் நீர் வான் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அவரது நினைவுநாளில், கறிக்கடைகளை மூடிவைப்பது வழக்கம்.
பொது சுகாதாரத் துறை
இந்நிலையில் தமிழகத்தில் எதிர் வரும் நீர் வான் நாளை முன்னிட்டு, இறைச்சி கடைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறை வெளியிட்டது.
அதில், நவம்பர் மாதம் 4ம் தேதி மகாவீரர் நினைவுநாளான நீர்வான் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இறைச்சிக் கடைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகள் மூடல் (Closing of shops)
அதாவது அனைத்து இறைச்சிக் கூடங்கள், சிறு இறைச்சிக் கடைகள் ஆகியவற்றை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் முடி இருக்கும்.
விற்பனைக்குத் தடை (Prohibition on sale)
சென்னை மண்டலம்-5 திற்கு உட்பட்ட கோட்டங்களில் அமைந்துள்ள, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மேலும் நீர் வான் நாளன்று, பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
நீங்கயது தடை
இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்புக் கிளம்பியதால், தடை உத்தரவுத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, தீபாவளி நாளன்று இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தெரிவித்திருக்கிறது.
மேலும் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை
ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ.3 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்- அடக் கொடுமையே!