இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 September, 2019 3:36 PM IST

படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு விதை பந்துகளையும், மரக்கன்றுகளை வழங்கி அசத்திய சூரியா ரசிகர்கள். 

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீயின் மீது பேனர் விழுந்து லாரி மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவத்திற்காக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களிடம் இனி கட்சி ரீதியாக எந்த பேனரும் வைக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

இந்த விஷயம் தொடர்பாக "காப்பான்" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூரியா தனது ரசிகர்களிடம் இந்த சம்பவத்தை பற்றியும் இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும் கூறினார். மேலும் நீங்கள் அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள், ரத்ததான நிகழ்ச்சிகள் போன்று நடத்துவதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கேட்டுக் கொண்டார்.

1000 விதைப்பந்துகள், 500 மரக்கன்றுகள்

நேற்றைய நாளில் சூர்யாவின் “காப்பான்” படம் வெளியானது. இந்நிலையில் சூர்யாவின் அறிவுறுத்தலை கேட்டு அவரது விழுப்புரம் ரசிகர்கள் பேனர் எதுவும் வைக்காமல் அதற்கு பதிலாக திரையரங்கத்தில் படம் பார்க்க வந்த பொது மக்களுக்கு விதை பந்துகளையும், மரக்கன்றுகளையும் வழங்கி அசத்தி விட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடிகர் சூரியாவின் ரசிகர்கள் "காப்பான்" படம் வெளியானதை முன்னிட்டு சூரியாவின் பேனர்கள் எதுவும் வைத்து கொண்டாடாமல் அவரின் அறிவுறுத்தலை கேட்டு புதிய மாற்றமாக விதைப்பந்து இயக்கத்துடன் இணைந்து படம் பார்க்க வந்த பொது மக்களுக்கு 1000 விதைப்பந்துகளையும், 500 மரக்கன்றுகளையும் வழங்கி அசத்திவிட்டார்கள்.

இது குறித்து சூரியா ரசிகர் மன்றத்தை சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது, விதை பந்துகளையும், மரக்கன்றுகளையும் நாங்களே தயார் செய்து பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம், மேலும் இந்த மாற்றமானது விழுப்புரம் மாவட்டத்தில் மற்றும் நடக்காமல் தமிழகம் முழுவதும் நடந்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றார்.   

K.Sakthipriya
Krishi jagran 

English Summary: NO More Banners: Actor Surya Fans Gave Seed Balls and plant saplings Instead of putting Banners
Published on: 21 September 2019, 03:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now