பிளாஸ்டிக் தடையை விரிவுபடுத்தியும், இதை வெற்றிகரமாக செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய "மக்கள் இயக்கம்" தொடங்க உள்ளதாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் கொள்கை விளக்க குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையான ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தடை விதித்தது. இருப்பினும், அதனை திறம்பட செயல்படுத்த வில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் தடை வெற்றிபெற மேலும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக மன்றங்கள், வணிகர் சங்கங்கள், குடிமக்கள் அமைப்புகள், இவைகளின் பங்குதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் மூலமாக மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க இருப்பதாகவும் இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்களின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடன் பிளாஸ்டிக் தடை கடுமையாக்கப்படும் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்கிரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பேனர்கள், தட்டுகள், கோப்பைகள் உள்ளிட்டவை 01.07.2022 முதல் பயன் படுத்த முடியாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 75 மைக்கிரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கை பை மற்றும் 60 கிராம் அளவிற்கு கீழ் நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் 30.09.2021 முதலும், 120 மைக்கிரான் தடிமனுக்கு கீழ்வுள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.2022 முதலும் பயன்படுத்த தடை விதிக்க கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: