மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 September, 2022 8:07 AM IST
Train Passengers

இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் முதன்மை தேர்வாக ரயில்கள் உள்ளன. பேருந்து, விமானம் போன்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தில் டிக்கெட் கட்டணம் குறைவு. பாதுகாப்பும் அதிகம். சௌகரியமாகவும் பயணிக்கலாம்.

ரயில் பயணிகள் (Train Passengers)

அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், உங்களுக்கு மிக முக்கியமான செய்தி வந்துள்ளது. ரயில் பயணிகள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சினை இரவு நேரங்களில் தூங்கும்போது சக பயணிகள் கொடுக்கும் தொந்தரவுதான். பக்கத்தில் இருக்கும் பயணிகளுக்கு தொந்தரவு ஆகுமே என்று கூடப் பார்க்காமல் சத்தமாக போனில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதேபோல, சிலர் சத்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இதுகூடப் பரவாயில்லை; இரவு நேரங்களில் கூட்டமாக அமர்ந்து சத்தமாகப் பேசிக் கொண்டும் இருப்பார்கள். இதனால் அருகில் இருக்கும் பயணிகளால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாது. இனி இதுபோன்ற பிரச்சினையே இருக்காது. அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய விதிமுறையை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது.

இதன்படி சக பயணிகளை இவ்வாறு யாராவது தொந்தரவு செய்தால் உடனடியாகப் புகார் கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விதிமுறை விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது. அதன் பிறகு ரயில் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். நிம்மதியான பயணம் அவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு!

விவசாயிகளுக்கு பென்சன் திட்டம்: மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்!

English Summary: No more problems for train passengers: New rules are here!
Published on: 30 September 2022, 08:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now