மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 October, 2021 12:18 PM IST
Credit : Dailythanthi

குழந்தைகளுக்குக் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

கொரோனா 3-வது அலை (Corona 3rd wave)

உலக நாடுகளை உலுக்கியக் கொரோனா வைரஸின் 3வது அலை அக்டோபரில் உச்சம் தொடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்தே இந்த அலை இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மக்களிடையே அச்சம் வியாபித்துள்ளது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெரியவர்களுக்கு முன்னுரிமை (Preference for adults)

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஒழுங்குமுறை முடிவு ஆகும். ஆனால், பொது சுகாதார பதிலளிப்பை கருத்தில் கொண்டால், பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். 

முடிவுக்கு வராது (Will not end)

பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது.கொரோனாவுக்கு எதிராகக் குழந்தைகளுக்கு போடுவதற்கு அங்கீகாரம் பெறுகிற எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிக்கான கடைசி ஆணியாக அமைந்து விடாது. குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை.

பெரியவர்களுக்குத் தடுப்பூசி (Vaccine for adults)

எனவே கொரோனாத் தடுப்பூசியை பெரியவர்களுக்குத்தான் போட வேண்டும்.
பிற கொரோனா கால கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள்தான் பின்பற்ற வேண்டும்.

2டோஸ் (2 dose)

பெரியவர்களில் குறிப்பாக பாதிக்கப்படுகிற பிரிவினராக உள்ள முதியவர்கள், இணை நோய் உடையவர்கள் போன்றோருக்கு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதைத்தான் பல்வேறு ஆதாரங்கள் காட்டுகின்றன.

மோசமான பாதிப்பு இருக்காது (There will be no bad impact)

பெரியவர்களைப் போல இல்லாமல், குழந்தைகள் கொரோனா வைரசின் மோசமானப் பாதிப்புகளைச் சந்திக்க மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பயனற்றதாகத்தான் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சீனாவில் மீண்டும் கொரோனா- அச்சத்தில் உலக நாடுகள்!

Ayog warns! கொரோனா மீண்டும் வேகமாகப் பரவக் கூடும்- நிதி அயோக் எச்சரிக்கை!

English Summary: No need to be vaccinated against coronara - expert say!
Published on: 22 October 2021, 10:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now