உலகம் முழுவதிலுமே தற்போது பெரும் பிரச்சனையாக இருப்பது பிளாஸ்டிக் கழிவுகள் தான். இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்த பாடில்லை. கடலில் நீருக்கடியில் எண்ணற்ற அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கிக் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 75 மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையை அமைச்சர் மெய்யநாதன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் (Plastic) பொருட்களை பயன்படுத்தும் தடை நடைமுறையில் உள்ளது. இத்தடையை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2021 அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.
Also Read : காலநிலை மாற்றத்தால் மதுரைக்கு பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பிளாஸ்டிக்
இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக், பிவிசி பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ணவும் பரிமாறவும் பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், அலங்காரத்திற்கான தெர்மோகால் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள் முதலியவை 2020 ஜூலை முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை
75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் 60 கிராம் சதுர மீட்டர் அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் வருகிற நவம்பர் 30 முதலும், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 2022 டிசம்பர் 31 முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க