தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோடைகாலத்தில் மின் தடை ஏற்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படாது
தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் மக்கள் மின்விசிறி, ஏசி போன்ற மின்சாதன பொருள் அதிகம் பயன்படுத்துவார்கள், அதனால் மின் நுகர்வு அதிகம் ஏற்படுகிறது. மேலும் மின் நுகர்வு இந்த மாதம் 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மின்தடை ஏற்படாமல் இருந்ததால் தான் இந்த அளவு மின் நுகர்வு இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகம் தேவைப்பட்டாலும் மின்தடை ஏற்பாடாது எனவும், சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும், மின் சேவை தொடர்பான குறைபாடு இருந்தால் சேவை மைய எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைங்கள் மூடப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க
ஆதார் கார்டை புதுபிக்கவில்லை என்றால் சிக்கல் தான்: உடனே இதைச் செய்யுங்கள்!
அட்சய திருதியை 2023: தங்கம் வாங்குவதற்கு ஏற்ற முகூர்த்த நேரம் இதோ!