உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அனைத்து பக்தர்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என கேரள அரசு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் அனுமதிக்கப்படுகின்றனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த பல ஆண்டுகால நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனை செய்யலாம் என தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற இளம்வயது பெண்கள் தடுக்கப்பட்டனர். அவர்களும், அவர்களுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் போராட்டங்கள் நடத்த கேரளாவில் பெரும் பதற்றமே நிலவியது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப ஒப்புகொண்டது. இந்த விசாரணை இன்றும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கியது. இதனையொட்டி நேற்று முதல் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள காவல்துறை சபரிமலையில் பணியாற்றும் போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.
அதில், போலீசார் என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. பக்தர்களிடம் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என பல விதமான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: