மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 June, 2022 12:16 PM IST
Nokia 4G Smartphone for Farmers: Price Rs 549!

நோக்கியாவின் 4G ஸ்மார்ட்போனை வெறும் 549 ரூபாய்க்கு வாங்கிடலாம் என்ற செய்தி ஆட்சரியம் அளிக்கிறது அல்லவா? மேலும், இது உண்மையான செய்தியா என்கிற குழப்பமும் உள்ளது, ஆனால் குழப்பம் வேண்டாம், இது உண்மையான செய்திதான், முழுமையான தகவலுக்கு பதிவை தொடருங்கள்.

Flipkart Electronics விற்பனையில் Nokia C01 Plus குறைந்த விலையில், விவசாயிகளின் பட்ஜெட்டுக்கு ஏற்ப கிடைக்கிறது. ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் திட்டம் இருந்தால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

அடிப்படைப் பயன்பாட்டிற்கு நல்ல ஃபோன் தேவைப்படுபவர்களுக்கான சிறந்த விருப்பம் இது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இயங்கும் Flipkart Electronics விற்பனையில் நோக்கியாவின் 4G ஸ்மார்ட்போனை வெறும் ரூ.549க்கு வாங்கிடலாம்.

Nokia 4ஜி ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வாங்கலாம் (Buy Nokia 4G smartphone at an affordable price)

Flipkart இன் செயலியில் 7,999 ரூபாய்க்கு Nokia C01 Plus விலையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 15% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை Flipkart இல் ரூ. 6,799 ஆக குறையும்.

இந்த போனை வாங்கும் போது, எஸ்பிஐயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.680 உடனடி தள்ளுபடி பெறலாம். அதன்பிறகு ரூ.6,119க்கு, இந்த ஸ்மார்ட்ஃபோனைப் வாங்கிடலாம்.

நோக்கியா C01 Plus ரூ.549க்கு எப்படி பெறலாம் (How to get Nokia C01 Plus for Rs. 549)

Nokia-வின், இந்த 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்க, எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தி, மலிவு விலையில் இந்த போனை வாங்கி பயனடையலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ரூ.6,799 பட்டியலிடப்பட்ட போனை வாங்குவதன் மூலம் ரூ.6,250 வரை சேமிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், Nokia C01 Plus இன் விலை உங்களுக்கு ரூ.6,799ல் இருந்து ரூ.549 ஆகக் குறையும் என்பது குறிப்பிடதக்கது.

நோக்கியா சி01 பிளஸ் அம்சங்கள் (Nokia C01 Plus Features)

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி 01 பிளஸின் வேரியண்ட் போனானது, Unisoc SC9863A செயலியில் வேலை செய்கிறது.

இதில் 5.45-இன்ச் HD + IPS டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. Nokia C01 Plus ஆனது 5MP பின்பக்க கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமராவுடன் கிடைக்கும், இதில் உங்களுக்கு 3000mAh பேட்டரியும், வழங்கப்படுகிறது. இந்த டூயல் சிம் 4ஜி ஸ்மார்ட்போன் விரிவாக்கக்கூடிய சேமிப்பு மற்றும் ஆடியோ ஜாக் உடன் வருகிறது என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் படிக்க:

கோவை வனப்பகுதியில் இ-கேமரா பொருத்த ரூ.7.2 கோடி ஒதுக்கீடு

இந்த அக்கவுண்ட் இருந்தால் ரூ.35 லட்சம் கடன்- ஈஸியாக வாங்கலாம்!

English Summary: Nokia 4G Smartphone for Farmers: Price Rs 549!
Published on: 25 June 2022, 12:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now