மறுசுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் ஜனவரி முதல் தேதி முதல் முதல்கட்டமாக தடை விதிக்கப்படவுள்ளது என சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை அமல் படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 80 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும்.