தமிழகத்தின் குமரிக் கடல் பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சுழற்சியின் காரணமாக மேற்கு மாவட்டங்கள் வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலவுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் சுறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை இந்த 6 மாவட்டங்களில் மழையின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.