பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 September, 2018 4:08 AM IST
வடகிழக்குப் பருவ மழை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழையின்போது சராசரி மழை அளவை எட்டும் என வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கால நிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் பயிர் மேலாண்மை இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பின்படி தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்குப் பருவமழை பெய்யும்.  இதற்காக ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பை (மென்பொருளை) பயன்படுத்தி காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின்படி மாவட்டம் வாரியாக பெய்யக் கூடிய சராசரி மழை அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழை அளவு (அடைப்புக் குறிக்குள்) குறித்த மண்டல வாரியான விவரங்கள் மற்றும் மண்டல வாரியான பயிர் வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை - 788 மி.மீட்டர் (767), கடலூர் 696 மி.மீ. (667), காஞ்சிபுரம் 640 மி.மீ. (657), திருவள்ளூர் 588 மி.மீ. (529), திருவண்ணாமலை 445 மி.மீ. (471), வேலூர் 348 மி.மீ. (343), விழுப்புரம் 498 மி.மீ. (466) போன்ற இடங்களில்  சராசரி மழை அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழை அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதிகளில் நிலக்கடலை, கம்பு, மானாவாரி நெல், கொடி வகைக் காய்கறிகள், தர்ப்பூசணி பயிரிட  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட தருமபுரி 329 மி.மீ. (338), கிருஷ்ணகிரி 289 மி.மீ. (300), நாமக்கல் 291 மி.மீ. (306), சேலம் 369 மி.மீ. (361) ஆகும். மேலும் இப்பகுதிகளில் மரவள்ளி, நிலக்கடலை, பயறு வகைகள், ஆமணக்கு, மானாவாரி தக்காளி, சோளம், மக்காச்சோளம், ராகி, கம்பு, வெண்டை, வெங்காயம் பயிரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவையில் 328 மி.மீ. (363), ஈரோடு 314 மி.மீ. (370), திருப்பூர் 314 மி.மீ. (281).  இப்பகுதிகளில் நிலக்கடலை, ஆமணக்கு, துவரை, சோளம், மக்காச்சோளம் பயிரிடலாம். 

காவிரி பாசன மண்டலத்துக்கு உள்பட்ட அரியலூர் 544 மி.மீ. (528), கரூர் 314 மி.மீ. (311), நாகப்பட்டினம் 937 மி.மீ. (924), பெரம்பலூர் 440 மி.மீ. (428), தஞ்சாவூர் 549 மி.மீ. (475), திருவாரூர் 717 மி.மீ. (642), திருச்சி 390 மி.மீ. (381). காவிரி டெல்டா பகுதிகளில் நெல், எள், கம்பு, சோளம், மக்காச்சோளம், சாமந்தி, சம்பங்கி, செவ்வந்தி பயிரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் 435 மி.மீ. (439), மதுரை 418 மி.மீ. (420), புதுக்கோட்டை 404 மி.மீ. (385), ராமநாதபுரம் 490 மி.மீ. (459), சிவகங்கை 421 மி.மீ. (393), தேனி 357 மி.மீ. (323), திருநெல்வேலி 465 மி.மீ. (461), தூத்துக்குடி 425 மி.மீ. (367), விருதுநகர் 418 மி.மீ. (453).   மேலும் இப்பகுதிகளில் மக்காச்சோளம், நிலக்கடலை, பயறு வகைகள், காய்கறிகள், பருத்தி, சிறு தானியங்கள், மல்லிகை, செவ்வந்தி பயிரிடலாம். 

அதிக மழை பெறும் மண்டலமான கன்னியாகுமரியில் 495 மீ.மீ. (543). இப்பகுதியில் நெல், நிலக்கடலை, பயறு வகைகள் பயிரிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலை மற்றும் அதிக உயரமுள்ள மண்டலமான நீலகிரி 476 மி.மீ. (462) ஆகும்.

மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவை எட்ட வாய்ப்புள்ளதாகவும், இதில் கணிக்கப்பட்ட ஆய்வில் 60 சதவீதம் வரையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary: North east monsoon
Published on: 29 September 2018, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now