தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) அக்டோபர் 28 ஆம் தேதி முதல், தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (Director of the Meteorological Center) பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 28-இல் வடகிழக்குப் பருவமழை:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும், வடகிழக்கு பருவமழை தொடங்கும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கக்கூடும். புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் 28 இல் வடகிழக்கு பருவமழைத் தொடங்கலாம். வடகிழக்கு பருவமழை வட தமிழகத்தில் (Northern Tamil Nadu) இயல்பாகவும், தென் தமிழகத்தில் (south TamilNadu) இயல்பைவிட குறைவாகவும் இருக்கும். வட தமிழகம், தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு:
தென்மேற்குப் பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. வடகிழக்குப் பருவமழையை நம்பி விதை விதைத்துள்ள விவசாயிகளுக்கும், வடகிழக்குப் பருவமழை எப்போது வரும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கும், காலம் கனிந்து விட்டது. இப்போதே, தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: ரூபாய் 1200 மானியம்!
முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு!