தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை (Northeast monsoon) தொடங்கி, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (Indian Meteorological Center) இவ்விரு மாநிலங்களுக்கும் மஞ்சள் அலர்ட் என அறிவித்துள்ளது. வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவக்காற்று வீச தொடங்கியதால், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை:
சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை (Heavy Rain) பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
புகார் தெரிவிக்க அழைக்கவும்:
மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் (Complaints) தெரிவிக்க 044 2538 4530, 044 2538 4540 ஆகிய அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில், இயல்பை விட அதிகம்! ஆய்வில் தகவல்!
2021 ஆம் ஆண்டு வறட்சி இல்லாத கோடை காலமாக இருக்கும்! பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்