News

Sunday, 04 September 2022 12:19 PM , by: T. Vigneshwaran

Organic Farming

தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கையான முறையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு விரும்பும் விவசாயிகள் எவ்வாறு மானியத்தை பெறலாம் என்று பார்க்கலாம் . இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து நாம் அறியலாம்.

தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை முறையில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் திருப்பூர் மாவட்டம் முத்தூர் வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொ.சந்திர கவிதா தெரிவித்துள்ளார்.

முத்தூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சம்பா நெல், எண்ணெய் வித்து, தோட்டக்கலை பயிர், காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் இந்த 2022-2023-ம் ஆண்டில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரினை பயன்படுத்தி மரவள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், தக்காளி, கத்தரிக்காய் உள்பட அனைத்து காய்கறி பயிர்களையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மொத்தம் 65 ஹெக்டேர் அளவில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இயற்கை சார்ந்த இடுபொருட்கள் மானியமாக வழங்கப்பட இருக்கின்றது.

இயற்கை வழியில் விவசாயம் செய்பவர்கள் மற்றும் புதிதாக இயற்கை சாகுபடி முறையை பின்பற்றுபவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள மற்றும் செய்ய விரும்பும் தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பெயர்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு உரிமைச் சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றுடன் வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று வெள்ளகோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பொ.சந்திர கவிதா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

TNPSC: குரூப் 2, 2ஏ பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது

ஒரு நாளில் ரூ.5.68 லட்சம் கோடி வருமானம்! எப்படி தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)