News

Saturday, 11 February 2023 02:42 PM , by: R. Balakrishnan

Ration shop

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பேரவையின் பொழுது பதவிக் காலத்தில் முழுமையான கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சரும் அசோக் கெலாட் கூறுகையில் ராஜஸ்தான் முன்னாள் அரசு ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தாலாம் என முடிவு செய்யப்பட்டது.

பென்சன்(pension)

பென்சன் திட்டமானது விரிவுபடுத்தப்படுகிறது. அதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இலவசம்(Free)

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ 3,000 கோடிக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு ரூ 500 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும்.

அதுமட்டுமின்றி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷனுடன் மாதந்தோறும் ஒரு கிலோ தானியங்கள், சர்க்கரை, உப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மூலம் புதிய தகவல்களை பெறலாம்.

PF உறுப்பினர்களுக்கான முக்கிய அப்டேட்: இந்த வசதிகள் எல்லாம் இனி கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)