ஒடிசாவில் நடைப்பெற்ற இரயில் விபத்தில் தற்போது வரை 238 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசாவில் நடைப்பெற்ற (Balasore) இரயில் விபத்தில் தற்போது வரை 238 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் 900 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக மாறியுள்ள ஒடிசாவில் நிகழ்ந்துள்ள இந்த இரயில் விபத்து. இதற்கிடையில், விபத்துக்குள்ளான இரயிலில் பயணித்து உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் தனது வேதனையான அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் பதிவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அனுபவ் தாஸ் என்கிற அந்த நபர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு-
”ஹவுராவில் இருந்து சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணியில் நானும் ஒருவன். இந்த மிகப்பெரிய இரயில் விபத்தில் காயமின்றி தப்பித்துள்ளேன்.
“கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 12841, யஸ்வந்த்பூர் - ஹவுரா SF மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. லூப் டிராக்கில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு மோதியதாக ஆரம்ப பதிவுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தடம் புரண்ட மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது (Balasore) அருகிலுள்ள இரயில் பாதையில் வந்த யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் பலமாக மோதியது. யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸின் 3 ஜெனரல் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்து தடம் புரண்டன. ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உள்ளிட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
நானே 200-250 க்கும் மேற்பட்ட உயிரிழந்த உடல்களை நேரில் கண்டேன். உடல்கள் நசுக்கப்பட்டிருந்தன, கைகால்கள் அற்ற உடல்கள் மற்றும் ரயில் தண்டவாளம் முழுவதும் இரத்தம் பரவியிருந்தது. என்னால் மறக்க முடியாத காட்சி அது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார். இந்த விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்,” என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மறுபுறம், ஒரு சில உள்ளூர் வாசிகள் (Balasore) இறந்தவர்களின் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும், ஒடிசா அரசாங்கம் அதை மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
“ரயில் விபத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வளவு பெரிய அவலத்துக்கு ரயில்வே துறைதான் காரணம்” என விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டார். தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் பிற முதன்மை அதிகாரிகளும் அந்த இடத்தில் உள்ளனர். மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்டார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் உதயநிதி மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.
pic courtesy: anubhav das (twitter)
மேலும் காண்க:
அசுர வேகமெடுக்கும் செயற்கை இழை உற்பத்தி- சமாளிக்குமா தென்னை நார்?