பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதிநிதிகள்.
பட்ஜெட் (Budget)
2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. இதற்காக கடந்த நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை பல தரப்புகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
ஆலோசனைக் கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கங்களும் தங்கள் கருத்துகளை அரசிடம் முன்வைத்துள்ளன. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிஎம் கிசான் (PM kisan)
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பணவீக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கமான பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வரும் நற்செய்தி!