News

Tuesday, 29 March 2022 07:35 PM , by: T. Vigneshwaran

Pension scheme

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களும் நடைமுறையில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிகப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் அடம் பிடித்து வருகிறது, பல மாநில அரசுகள் ஒவ்வொன்றாக பழைய பென்சன் திட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலமும் பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே இப்போது பழைய திட்டத்திற்கு மாறியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலமும் மற்ற இரண்டு மாநிலத்தை போல பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த போவதாக கூறியுள்ளது. ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டப்பேரவையில் பொதுமக்கள் நலன் குறித்த பல்வேறு அறிவிப்புகளை கூறியுள்ளார். அறிவிப்புகளில், பழைய பென்சன் திட்டமும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மாநிலங்களின் இந்த முடிவைத் தொடர்ந்து மத்திய அரசும் விரைவில் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் மத்திய அரசின் தரப்பில் தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. முன்னர் மாநிலங்களவையில் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சரான பகவத் காரத், திட்டத்தை செயல்படுத்தும் எண்ணமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

காய்கறி விலை மீண்டும் உயர்ந்தது... தமிழகத்தில் விலை என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)