ஒமிக்ரான் தொற்று ஏற்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சதவீதம் டெல்டாவை விட 45% குறைவு என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமிக்ரான் (Omicron)
சீனாவில் கண்டறியப்பட்டக் கொரோனா ஒருகாலம் உலக நாடுகளை உலுக்கி எடுத்த நிலையில், தற்போது உருமாறியக் கொரோனாவாக உருவெடுத்துள்ளது ஒமிக்ரான் வைரஸ்.
கல்லூரி ஆய்வு
இதையடுத்து உலக நாடுகள் விழிப்புடன் கண்காணிப்பில் இறங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அங்குத் தொற்று உள்ள குழுவினரிடம் ஏற்பட்ட பாதிப்பு குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வு நடத்தியது.
டிசம்பர் 1 முதல் 14 வரை இங்கிலாந்தில் பி.சி.ஆர்., பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று உறுதியானவர்களின் தகவல்களை ஆராய்ந்தனர்.
ஆய்வின் முடிவுகள் (Results of the study)
இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை டெல்டாவை விட 40 முதல் 45 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.தடுப்பூசி போட்டிருப்பது இதற்குக் காரணம் என்கின்றனர்.
ஏற்கனவே கொரோனாத் தொற்று ஏற்பட்டு, மீண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.
இரு மடங்கு குறைவு (Twice as low)
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒமிக்ரான் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் பாதிப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மூன்றில் இரு பங்கு குறைவுதான் என்பதாகும்.
80 சதவீதம் குறைவு
ஒமிக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் வெளியாகி உள்ள தரவுகள், இந்த வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவு என காட்டுகின்றன.
பாதிப்பின் தீவிரம்
டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது, நோய் தீவிரம் அடைவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு என்றும் காட்டுகின்றன. எனவே டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்ற கருத்து வலுத்து வருகிறது.
மேலும் படிக்க...
ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!