News

Thursday, 23 December 2021 10:11 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் முழுவதும் இதுவரை 33 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் ஆட்டம் (Omicron Game)

உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன.

ஆனாலும் தன் ஆட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இந்த வைரஸ், ஒருமாத காலத்திற்குள் ஒன்றல்ல, இரண்டல்ல, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கால்பதித்துவிட்டது என்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

எனவே இந்த வைரஸைச் சாதாரணமாகக் கருத வேண்டாம் எனவும், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

236 பேருக்கு பாதிப்பு (236 people were affected)

இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த வைரஸ் கடந்த21 நாட்களில் 236 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என கூறப்படுகிறது.

அதேபோல தற்போது தமிழகத்திலும் தன் கோரத்தாண்டவத்தைத் தொடங்கிவிட்டது ஒமிக்ரான். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

33 பேருக்கு உறுதி (Guaranteed to 33 people

அவர்களில் 41 பேரின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் வெளியானதில் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்ட நிலையில் முடிவுகளுக்காக காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் கவனம் (Extra focus)

எனவே தமிழகத்திலும் ஒமிக்ரான் கால்பதிக்கத் தொடங்கிவிட்டால், மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், சானிடைஸரைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)