News

Friday, 17 December 2021 06:27 PM , by: R. Balakrishnan

Omicron Infectious

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமிக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது.

ஒமிக்ரான் தொற்று (Omicron Virus)

இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று உறுதியானது. தற்போது மகாராஷ்டிரா 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, குஜராத்தில் தலா 8, ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. யூனியன் பிரதேசங்கள் உள்பட 11 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இதனைத் தெரிவித்தார்.

உலக அளவில் பிரிட்டன், டென்மார்க், நார்வே, தென் ஆப்பிரிக்க நாடுகளில்தான் ஒமிக்ரான் பரவல் அதி வேகமாக உள்ளது.

முகக்கவசம், சமூக இடைவெளி முக்கியம்: (Face Mask, Social Distance)

"ஒமிக்ரான் வைரஸால் சர்வதேச கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். இப்போதைக்கு உலக அளவில் கிடைக்கும் தரவுகள் நோய் எதிர்ப்பாற்றலை உடைத்துப் பரவுவது உறுதியாகியுள்ளது. தடுப்பூசி ஆற்றலை ஒமிக்ரான் மீறுகிறதா என்று இன்னும் ஆதாரங்கள் வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியன அவசியம். தடுப்பூசி (Vaccine) மட்டுமே இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முழுமை செய்துவிடாது என்ற உலக சுகாதார அமைப்பின் கூற்றை உணர்ந்து நடக்க வேண்டும்" என்று லாவ் அகர்வால் கூறினார்.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர், தேவையற்ற பயணங்கள், பெருங்கூட்டங்கள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று கூறினார். எந்தெந்த மாவட்டங்களில் பாசிடிவிட்டி ரேட் 5%க்கும் மேல் இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் எல்லாம் சில கட்டுப்பாடுகளை விதிப்பது நலம். குறைந்தது இரண்டு வாரங்களாவது இந்த நடவடிக்கையைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.

மேலும் படிக்க

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)