நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 December, 2021 11:21 AM IST
Credit: The Economic Times

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மும்பையில், வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் தொடக்கம் (Start of the game)

கடந்த 2 வருடங்களாகக் கொரோனா வைரஸ் அரக்கன் நம்மை ஆட்டிப்படைத்த நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரஸ் ஆட்டம் காட்டத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வருகிறார்கள்.

பாதிப்பு அதிகரிப்பு (Increased vulnerability)

இந்நிலையில் தற்போது மகாராஷ்ட்ராவில் மேலும் இரண்டு பேருக்கும், ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் புதிதாக ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

77 நாடுகளில் (In 77 countries)

ஏற்கனவே 77 நாடுகளை ஆட்டிப் படைத்து வரும் ஒமிக்ரான் வைரஸின் தாக்குதலுக்கு, இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தொற்றின் எண்ணிக்கை அதிகமாவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

144 தடை உத்தரவு (144 Prohibition Order)

மேலும், ஒமிக்ரான் சமூக பரவலாக மாறினால் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ஒமிக்ரான் பாதிப்பு, மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருவதால்  தலைநகர் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

WHO எச்சரிக்கை (WHO alert)

இதனிடையே  ஒமிக்ரான் வைரஸ் குறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

எதிர்பார்க்காத வேகம் (Unexpected speed)

தற்போதுவரை 77 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில நாடுகளிலும் கண்டு பிடிக்கப்படாமல் ஒமைக்ரான் பரவியிருக்கலாம். இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட டெல்டா உட்பட எந்த உருமாற்ற வைரசும் இப்படி ஒரு வேகத்தில் பரவியதை நாங்கள் பார்க்கவில்லை. நினைத்து பார்த்திராத வேகத்தில் பரவும் ஒமைக்ரானை சில நாடுகள் குறைத்து மதிப்பிடுகின்றன.

தடுப்பூசி மட்டும் போதாது (Vaccination alone is not enough)

ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை குறைந்த அளவில் ஏற்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மீண்டும் கையாள முடியாத வகையில் சுகாதார அமைப்புகளை மூழ்கடிக்கக்கூடும். தடுப்பூசியால் மட்டுமே ஒமைக்ரானை தடுக்க முடியாது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்றவற்றைக் கடுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசி திறனை கணிசமான அளவில் ஒமைக்ரான் குறைப்பதாக சிலத் தடுப்பூசி நிறுவனங்கள் கண்டறிந்திருப்பதுடன், அதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

English Summary: Omicron speeds up to 144 bans until Dec. 31
Published on: 15 December 2021, 11:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now