News

Friday, 03 December 2021 12:46 PM , by: T. Vigneshwaran

Latest Update On omicron

பள்ளிகளில் ஓமிக்ரான் வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டுதலின்படி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மிகவும் வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழக அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் குறித்து தெரிந்து கொள்வோம்.

  • முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்க வேண்டும்.

  • நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் தொடரலாம்.

  • பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • ஆசிரியர்கள் அவசியம் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

  • மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் கவனிக்க வேண்டும்.

  • வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.

  • நீச்சல் குளங்களை மூடி வைத்திருக்க வேண்டும்.

  • விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை அனைத்தையும் தவிர்க்க வேண்டும்

  • நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க:

1-8ம் வகுப்பு வரை சுழற்சி வகுப்புகள்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

இந்தியாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: 2 பேருக்கு உறுதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)