News

Thursday, 02 December 2021 06:21 PM , by: R. Balakrishnan

Omicron enters into India

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் (Omicron) வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான், உலக அளவில் பரவக் கூடியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பெருந்தொற்றின் பாதையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார மையம் (WHO) எச்சரித்துள்ளது.

விமான சேவை நிறுத்தம்

இதனை தொடர்ந்து பல நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளன. ஜப்பான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் வெளிநாட்டினருக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளன. அதேபோல், இந்தியாவிலும் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான்

செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் கூறும்போது, கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதினை சேர்ந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்: பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட வாகனஓட்டிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)