தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான (Assembly elections) வேட்பு மனு இன்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஏப்.6 வாக்குப்பதிவு, மே.2 வாக்கு எண்ணிக்கை (Vote counting) என அறிவிக்கப்பட்டது. ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதன் முறையாக ஆன்லைனில் வேட்பு மனுக்களை (Nomination) தரவிறக்கம் செய்து, ஆன்லைனிலேயே வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் முறையையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேட்பாளர் வைப்புத்தொகை 10 ஆயிரம் எனவும், பட்டியல் இனத்தவருக்கு ரூ.5000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வேட்பு மனுத்தாக்கல்:
சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம் போடியில் போட்டியிடுவதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் நாளே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் பழனிசாமி மார்ச் 15 அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முதல் நாள் என்றாலும் பிரதான கட்சிகள் இன்று தாக்கல் செய்ய வாய்ப்பு குறைவு என்றும் நாளையும், நாளை மறுநாளும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்பதாலும் திங்கட் கிழமை அதிக அளவில் வேட்புமனு தாக்கல் நடக்கும் எனத் தெரிகிறது.
மூன்றாவது முறை:
போடி தொகுதியில் ஓபிஎஸ் 3-வது முறையாக போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்; அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
2011 தேர்தலில் போடியில் போட்டியிட்ட போது மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். 2 முறை வெற்றி பெற செய்த போடி மக்களுக்கு சேவைபுரிய மீண்டும் போட்டியிட்டுளேன். போடி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் போடி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் மீண்டும் வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் போடியில் நிற்கிறேன். மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிந்து செயல்படுத்தப்படும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக (ADMK) வெற்றி பெறும் எனவும் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சம்பளம் மாதிரி மாத வருமானம் தரும் SBI-யின் சூப்பர் திட்டம்!
பொது விநியோகத் திட்டத்துக்காக 2 ஆயிரம் டன் அரிசி!