கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி செந்தில் நகரை சேர்ந்தவர் சதிஷ், வயது 30. கர்நாடகா மாநிலம், பொம்மசந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் வேலைக்கு சென்று வருவதற்காக கடந்தாண்டு ஏப்., 23 ல், 90 ஆயிரம் ரூபாய்க்கு, ஓகினாவா மின்சார ஸ்கூட்டரை விலைக்கு வாங்கினார். அதற்கு தினமும் சார்ஜ் செய்து, வேலைக்கு சென்று வந்தார்.
மின்சார ஸ்கூட்டர் (Electric Scooter)
நேற்று காலை, 8:00 மணிக்கு வழக்கம் போல் சதிஷ் வேலைக்கு புறப்பட்டார். அப்போது, அவரது மூன்று வயது மகன், தன்னை ஸ்கூட்டரில் ஒரு ரவுண்ட் அழைத்து செல்ல வேண்டும் என அடம் பிடித்தார். இதனால் தனது மகனை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள உப்கார் லே அவுட் வழியாக சதிஷ் சென்றார்.
அப்போது, திடீரென பைக்கின் சீட்டிற்கு அடியில் இருந்து புகை வந்தது. இதனால், மகனுடன் கீழே இறங்கிய சதிஷ், பைக்கின் சீட் கவரை திறந்து பார்த்தார். அப்போது திடீரென தீப்பிடித்து பைக் எரிய துவங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த சதிஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். தகவலறிந்த ஓகினாவா மின்சார ஸ்கூட்டர் ஷோரூம் தரப்பு, புதிய ஸ்கூட்டர் வாங்கி தருவதாக சதிஷிடம் கூறி விட்டது. அதனால், சிப்காட் போலீசில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. பைக்கில் இருந்து புகை வெளியே வரும் போதே, சதிஷ் தனது மகளுடன் கீழே இறங்கி விட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதன் விற்பனைய தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இணையத்தில் வைரல்: லாரியில் தொற்றிக் கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்!