ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா தெரிவித்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து, தானும் சைக்கிள் ஓட்டினார்.
ஒரு நாடு ஒரு டயாலிசிஸ் திட்டம் (One Nation One Dialysis Scheme)
சென்னை ஓமந்தூரர் பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். மேலும் பயிற்சியின் போது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற விளையாட்டு வீராங்கனை,+2 மாணவி சிந்து, மரியம்மா மற்றும் பாலாஜி ஆகியோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவடியில் புதிதாக தொடங்கப்படவுள்ள மத்திய அரசின் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய மன்சுவிக் மாண்டவியா, ஆவடியில் அமைக்கப்படும் ஆரோக்கிய மைய கட்டுமானப் பணிகள் டிசம்பர் 22க்குள் முடிவடையும். இந்த மையம் மூலம் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த மையத்தின் இணையதளம் மற்றும் செயலியை நாங்கள் ஏற்கனவே வெயிட்டு இருக்கிறோம்.
ஆரோக்கிய மையம், நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும். பிரதமர் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். நாடு முழுவதும் சுகாதார சேவையை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். மத்திய அரசு விரைவில் ஒரு நாடு ஒரு டையலிஸ் திட்டத்தை தொடங்க உள்ளது, இதன் மூலம் ஒரு மாநிலத்தை சேர்ந்த டயாலிசிஸ் நோயாளி இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுகாதார நலத் துறை மையங்களில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். 2600 கோடிக்கு மேல் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதார துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. இதில் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த 400 கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க