தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் (one nation one ration) திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் திட்டம் (Union govt Scheme)
மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இத்திட்டத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல்செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம் (Discussion)
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, கடைகளுக்கு ஒதுக்க வேண்டிய கூடுதல் பொருட்கள், வெளி மாநிலத்தவர்களுக்காக கூடுதல் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இத்திட்டம், ஆதார் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால், ‘பிஓஎஸ்’ எனப்படும் விற்பனை முனைய இயந்திரங்களில் விரல் ரேகை பதிவு செய்யும் வசதி இணைக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.
மேலும் படிக்க....
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!