News

Monday, 19 July 2021 11:03 AM , by: T. Vigneshwaran

Covid Test

இன்று தமிழ்நாட்டில் 2079 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,35,402 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பரவலால் 29 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று 2,743 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,73,781 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டுமே இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது- 29. மொத்த பாதிப்பு 25,35,402 ஆகவும் இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,743 மற்றும் இன்று சோதனை செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகள் 1,43,429 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு , தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிந்தது. 

மேலும் படிக்க:

வட்டியே இல்லாமல் ரூ. 60 ஆயிரம் வரை கடன்: அவசர தேவைக்கு உதவும் Paytm!!

சிறிய LPG சிலிண்டர் புக் செய்ய சான்று தேவையில்லை

விவசாயிகளுக்காகப் பசுமைப் பேருந்து சேவை-தமிழகத்திலும் தொடங்கப்படுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)