உத்தர பிரதேசத்தில், 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ், வாரணாசி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற 'குலாபி மீனாகரி' கைவினைப் பொருட்கள் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாரணாசி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் குலாபி மீனாகரி கைவினைப் பொருட்கள் உலக புகழ்பெற்றவை. இவை, வண்ண கண்ணாடி துண்டுகளால் அழகிய வேலைப்பாடுடன் செய்யப்படுகின்றன.
கைவினைப் பொருட்கள் (Handicrafts)
சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி விதவிதமான பரிசுகள் வழங்கி அசத்தினார். இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு குலாபி மீனாகரியில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை தான் வழங்கினார்.
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One District One Product)
உ.பி.,யில் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. கைவினை பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரணாசியின் புகழ்பெற்ற குலாபி மீனாகரி கைவினை பொருட்களை, ரயில் நிலையம், வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் விற்க, உ.பி., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உத்திரப் பிரதேசத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இப்பொருட்களின் விற்பனை தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது
மேலும் படிக்க
தென்னைக்கு பயிர் காப்பீடு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவை: தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்!