News

Tuesday, 01 February 2022 09:46 AM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சலுகைக் குறைக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் கூடுதல் விடுமுறைத் தேவைப்படுமெனில், மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தால் விடுமுறை காலத்தை மேலும் நீட்டிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை ஆட்கொண்டு ஆட்டம்போட்டு வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை.

ஒருவாரமாகக் குறைப்பு

இதன் ஒருபகுதியாக, ஒடிசா மாநிலத்தில் நேற்று மேலும் 8,612 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆறு வயது சிறுமி உள்பட 19 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர்.

இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஒருவாரத்திற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுமுறைத் தேவைப்படும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்யதால், மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தால் விடுமுறை காலத்தை மேலும் நீட்டிக்க முடியும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் 14 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)