மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 September, 2019 12:57 PM IST

வரத்து குறைவால் இன்னும் மூன்று மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

வரத்து குறைவு

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் காய்கறிகளின் விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் காய்கறிகளில் முக்கியமாக வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பெரிய வெங்காயம் அதிக விலையில் கிலோ  ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழலை தமிழக அரசு விரைவில் சரி செய்யும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை என்று காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் லாரிகள் மூலம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த 25 ஆனது 15 ஆக குறைந்துள்ளது மற்றும் இதன் காரணமாகவே பெரிய வெங்காயத்தின் விளையும் உயர்ந்துள்ளது.

விலை குறைய வாய்ப்பில்லை

பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.60 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இது குறித்து திண்டுக்கல் வெங்காய ஏற்றுமதியாளர்கள் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கம் பொருளாளர் எம்.வி. மாரிமுத்து கூறியதாவது: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது மற்றும் நடப்பட்ட வெங்காயமும் சேதமடைந்துள்ள நிலையில் திண்டுக்கல்லிற்கு பெரிய வெங்காயம் கொண்டு வரும் லாரிகளின் எண்ணிகை 25 இல் இருந்து 15 ஆக குறைந்துள்ளது. இதனால் பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்த்தப்பட்டது.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 க்கு விற்கப்படும் நிலையில் பெரிய வெங்காயம் ரூ.60 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் வெங்காயத்தை நடவு செய்து அறுவடை செய்ய மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் தற்போதுள்ள பெரிய வெங்காயத்தின் இருப்பு படிப்படியாக தீரும் நிலையில் விளையும் உயர்த்தப்படும் என்றும் இன்னும் மூன்று மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.  

Related Links: https://tamil.krishijagran.com/news/sellers-info-opportunity-to-extend-onion-rate-for-a-week-tamil-nadu-government-taking-steps-to-solve/

K.Sakthipriya
Krishi Jagran   

English Summary: Onion Price: Dindukkal Onion Exporters Commission Mandi Traders Association Stated No Chances for Price Decrease on Onion for Next 3 Months
Published on: 27 September 2019, 12:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now