கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் (Onion) விலை கடுமையாக உயர்ந்து, உச்சத்தில் இருந்தது. இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் அளிக்கும் விதமாக தோட்டக்கலை துறை (Horticulture Department) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வு:
தீபாவளி பண்டிகையை ஒட்டி, மாதவரம் தோட்டக்கலை பண்ணையில், மானிய (Subsidy) விலையில் வெங்காயம் விற்பனை நடக்கிறது. வெங்காயம் விளையும் மாநிலங்களில், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்திற்கு தட்டுப்பாடு (Scarcity) ஏற்பட்டு, அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது, பெல்லாரி வெங்காயம் (Bellary onion) 1 கிலோ, 70 - 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி (Deepavali) பண்டிகை நேரத்தில், வெங்காயம் விலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தவிக்கின்றனர்.
மானிய விலையில் வெங்காயம்:
தோட்டக்கலைத் துறை வாயிலாக வெங்காயம் விற்பனை (Sales) செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து, இரண்டு லாரிகளில் தலா, 15 டன் வெங்காயம் எடுத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தீபாவளி பண்டிகையை ஒட்டி, மூன்றாவது லாரியில், 15 டன் வெங்காயம் வந்துள்ளது. இதை, மாதவரம் தோட்டக்கலை பண்ணையில் கிலோ, 45 ரூபாய்க்கு, மானிய விலையில் விற்பனை செய்யும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தக்காளி, வெங்காயம் விலை குறைவு! மக்கள் மகிழ்ச்சி!
புதுச்சேரியில் கரோனாவால் சரிந்த வெல்லம், நாட்டு சர்க்கரை விலை; தவிக்கும் உற்பத்தியாளர்கள்